
இலங்கை ஜம்யத்துள் உலமாவினை வெளிநாட்டு ஏற்றுமதி பொருட்களுக்கு ஹலால் சான்றிதழ் வழங்குவதை நிறுத்துமாறு கோருதல்


இலங்கையில் தயாரிக்கபட்டு உள்ளநாட்டில் விநோகிக்கபடும் பொருட்களுக்கு ஹலால் இலச்சினை காட்டப்பட வேண்டிய அவசயிமில்லை.வெளிநாட்டு சந்தைக்காக ஏற்றுமதி செய்யப்படும் உற்பத்திகளுக்கு மட்டும் வழமைபோல் உற்பத்தி நிறுவனங்கள் ஹலால் சான்றிதழை பெற்றுகொண்டு ஹாலால் இலட்சினையை பொறிக்கவேண்டும் என இங்கை ஜம்யத்துள் உலமா 2013-03-11 திகதி ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது .ஜம்யத்துள் உலமாவின் இம்முடிவானது ஏற்றுகொள்ளக் கூடியது அல்ல.வெளிநாட்டு சந்தைக்காக ஏற்றுமதி செய்யப்படும் உற்பத்திகளுக்கு மட்டும் ஹலால் சான்றிதழை வழங்குவதும் ஹாலால் இலட்சினையை பொறிக்க வேண்டும் என்பது முற்றும் முழுதாக தீவிர போக்குடையவர்களை திருப்தி படுத்தும் செயல்.அது மட்டுமல்லாது இந்த அழுத்ததுக்குள்ளாகி,அவசரமாக எடுக்கபட்ட இம்முடிவானது ஹலாளை ரத்து செய்ய கோருவதால் ஏற்படும் பொருளதாரரீதியான இழப்புகளை கடும் போக்குடையவர்கள் உணர்ந்து கொள்வதை இட்டும் தடுத்து விடுவதோடு ஹலாலுக்கு ஆதரவாக பெரும்பான்மை சமுகத்தில் எழும் குரல்களை இல்லாமல் செய்து விடுகிறது.எனவே சமூக ஒற்றுமைகாக ஹலால் வாபஸ் வாக்கப்படும்மாக இருந்தால் அது முழுமையாக வாபஸ் பெறப்படவேண்டும்.வெளிநாட்டு ஏற்றுமதி பொருட்களுக்கு ஹலால் சான்றிதழ் வழங்குவதை நிறுத்தப்படவேண்டும்.தயவு செய்து உங்களது பெயரையும் ஈமெயில் முகவரியையும் கொடுத்து sign பொத்தானை அழுத்தவும்.உங்களது signatures அடங்கிய petition ஜம்யத்துள் உலமாவுக்கு அனுப்பிவைக்கப்படும். இது பற்றி நண்பர்களுக்கும் தெரிய படுத்தி விரைவாக 1000 கையொப்பங்கள் கிடைக்க உதவவும்
Comment