
சீமானை விடுதலை செய் !!!


உங்கள் எதிர்ப்புகளை இங்கே மறக்காமல் பதிவு செய்யுங்கள் நக்கீரன் இதழில் அண்மையில் வெளிவந்த செய்தி ஒன்று : "சிறையில் சீமானுக்கு கடும் நெருக்கடி சென்னையில் நடந்த தமிழக மீனவர் படுகொலை கண்டன கூட்டத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக டைரக்டர் சீமான் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். தனிமை சிறையில் அடைத்துள்ளார்கள். வாக்கிங் செல்லக்கூட அனுமதிக்கவில்லை என்று சீமான் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இன்னமும் முடிந்தபாடில்லை. இந்நிலையில் சீமான், சிறையில் யாருடனும் அதிகம் பேசக்கூடாது என்று சிறை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாம். சிறையில் உள்ள புத்தக லைப்ரரிக்கு சென்று புத்தகம் படிக்க கூட சீமானுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்ததில் இருந்துதான் சிறையில் இப்படியான நெருக்கடி அதிகமாகிக்கொண்டே போகிறது " இந்த செய்தி மூலம் இது அரசின் ஒரு அடிப்படை மனித உரிமை மீறல் என்பது உறுதியாகிறது. எனவே, அரசியல் கைதி சீமானை ஆகஸ்ட் 31 முன் விடுதலை செய் அல்லது 1 . சர்வதேச மன்னிப்புச் சபை (Amnesty International), ஆசிய மனித உரிமைகள் கழகம் (Asian Human Right Organization), மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch) ஆகியவற்றில் அடிப்படை மனித உரிமை மீறல்கள் குறித்து முறையிடுதல் 2 . கருணாநிதிக்கும் அவர்களது நீதியில்லாத ஆட்சிக்கும் முடிவு கோரி தமிழர் வாழும் பகுதிகளில் (தமிழ்நாடு மற்றும் உலகமெங்கும்) செப்டம்பர் முதல் வாரத்தில் கறுப்புப் பட்டி அணியும் போராட்டம் ஒன்று நடத்துதல். 3 . இதற்கும் தி மு க வும் அதன் தலைமையும் சீமானை விடுதலை செய்யா விட்டால், செப்டம்பர் 15 ம் திகதி உலகெங்கும் வாழும் தமிழர்கள், கருணாநிதிக்கு 'கொடுங்கோல் கருணாநிதி' என்ற நிலையான பட்டத்தை மனப்பூர்வமாக சூடிக்க்கொள்வார்கள். இன்னும் சீமானுக்கு எதிரான நாம் எதிபாராத சூழ்சிகள் நடைபெறுவதை உள்வீட்டு செய்திகள் நமக்கு உணர்த்துகின்றன. தமிழ் நாட்டில் கருணாநிதிக்கு ஆதரவாக, தமிழருக்கு எதிரான சதிகளுக்கு துணை போகும் சக்திகள் வரலாற்றில் தமக்கு ஏற்படப் போகும் கறையை உணர்ந்து, தமிழர் உணர்வுகளுக்கு துணை நிற்குமாறு சிரம் தாழ்ந்து வேண்டுகிறோம். சாதி வெறியையும், மக்களின் உணர்வுகளையும் அரசியலுக்காக பயன்படுத்தும் சக்திகளை இனம் காண்போம். உங்கள் ஆதரவை தயவு செய்து இங்கே பதிவு செய்யவும். நன்றிகளுடன் நண்பன்.
Comment