Sandhya Ravishankar 0

கன்னியாகுமரி செய்தியாளர் மீது பொய் வழக்கு

39 people have signed this petition. Add your name now!
Sandhya Ravishankar 0 Comments
39 people have signed. Add your voice!
4%
Maxine K. signed just now
Adam B. signed just now

கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர் K.S.மனு என்பவர் சித்த மருத்துவர் மற்றும் அவரது குழுவினரால் கொடூரமாக தாக்கப்பட்டதோடு, அவர்மீது பொய்யாக பல்வேறு பிரிவுகளின் கீழ் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது.



மனு புதியதலைமுறையில் கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளராக பணியாற்றி வருகிறார்...



செப்டம்பர் 13, 2018 அன்று முன்னாள் வார்டு உறுப்பினர் அனில் குமார் என்பவர் மனுவை கைபேசியில் அழைத்து, கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் உள்ள KRS மருத்துவமனையில் சித்த மருத்துவர் R.சுந்தர் என்பவர் விபத்தில் காயமடைந்து சிகிச்சைக்காக வந்த ஒருவருக்கு சுகாதாரமற்ற முறையில் மருத்துவமனை வளாகத்தின் தரையில் வைத்து சிகிச்சை அளிப்பதாக தகவல் அளித்துள்ளார்.



இந்த தகவலையடுத்து செய்தியாளர் மனு அந்த மருத்துவமனைக்கு சென்று முறையற்று சிகிச்சை வழங்குவதை தனது கைபேசியில் படம் பிடித்துள்ளார். அதுமட்டுமின்றி ஏன் இப்படி சிகிச்சை அளிக்கின்றீர்கள் என்றும் மருத்துவர் சுந்தரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.



அதன்பின் சித்த மருத்துவரின் அழைப்பில் பேரில் 2 பேர் மனுவை மருத்துவமனை வளாகத்தை விட்டு வலுக்கட்டாயமாக தூக்கி சென்று, அவரின் கைபேசியை பிடுங்கியுள்ளனர். சிறுது நேரத்தில் மருத்துவர் சுந்தரின் 3 சகோதரர்கள் உட்பட 14 பேர் மனுவை கொடூரமாக தாக்கியுள்ளனர்.



இதனால் நெஞ்சு பகுதியில் பலத்த காயமடைந்த மன்னு வலியால் துடித்துள்ளார். அருகில் இருந்த ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் தனது ஆட்டோவில் மனுவை முதலுதவி சிகிச்சைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளார். கடுமையான வலியால் துடித்த மன்னு தனக்கு தெரிந்த தனியார் மருத்துவமனையில் பாதுகாப்பு கருதி மேல்சிகிச்சைக்காக சென்றுள்ளார். தொடர்ந்து 4 நாட்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.



மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மனுவை missing case-இல் காவல்துறையினர் தேடி வந்துள்ளனர்.



14, செப்டம்பர் 2018 அன்று சட்டப்பிரிவு 147, 451, 294(b), 323, 506(1) கீழ் செய்தியாளர் மனு மீது சித்த மருத்துவர் சுந்தர் சார்பில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. இதில் அனில்குமார் A1 ஆகவும், அவரது மனைவி A2 வாகவும், மன்னு A3 யாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.
செப்டம்பர் 20, 2018 அன்று கன்னியாகுமரியில் உள்ள நீதிமன்றத்தில் மனு ஜாமீன் பெற்றுள்ளார்.



மனு அவரது மாவட்டத்தில் நில அபகரிப்பில் ஈடுபடும் அரசியல்வாதிகள் பற்றியும், தனி நபர்கள் பற்றியும் பல்வேறு புலனாய்வு கட்டுரைகள் எழுதியதன் மூலம் அனைவருக்கும் நன்கு தெரிந்தவர். அதுமட்டுமின்றி இந்தியாவின் தென்பகுதியில் ஆட்கொண்டுள்ள ஊழல் குறித்தும் செய்திகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர்.



காவல்துறையினரால் கட்டம் கட்டப்படும் மனு போன்ற செய்தியாளர்களுக்கு கட்டாயமாக பாதுகாப்பு அளிக்க வேண்டியது நம் அனைவரது கடமை. அவரது நேர்மையின் காரணமாக அவரது வட்டத்திலேயே யாரும் அவருக்கு ஆதரவளிக்க முன்வரவில்லை. உண்மை என்னவென்றால் அவர் எந்த அரசியல் பிரமுகரிடம் லஞ்சம் வாங்கியதில்லை, பயமின்றி பல்வேறு புலனாய்வுகளை செய்துள்ளார். இதன்காரணமாக நிறைய எதிரிகளை சம்பாதித்துள்ள இவர் பலமுறை மிரட்டப்பட்டும் இருக்கிறார்.



இதன் மூலம் மாவட்ட செய்தியாளர்கள் பலரும் தாக்கப்படுவதோடு அவர்கள் மீதான வன்முறையும் அதிகரித்து வருவது தெளிவாக தெரிகின்றது. UNESCO என்ற அமைப்பு 2017 ஆம் ஆண்டு ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் 2012 முதல் 2017 ஆம் ஆண்டிற்குள் உலக அளவில் வாரத்திற்கு 2 செய்தியாளர்கள் கொல்லப்பட்டு வருவதாக அதிர்ச்சி தகவலை அளித்துள்ளது. நாம் அனைவரும் ஒன்றாக கைகோர்த்து மனு போன்ற செய்தியாளர்கள் அவர்களது பணியை அச்சமின்றி தைரியத்துடன் செய்திட துணை நிற்க வேண்டும்.

Share for Success

Comment

39

Signatures