டெல்டா பகுதி மண்ணை மலடாக்கும், ஹட்ரோ கார்பன் எடுக்கும் நாசகார திட்டத்தை எதிர்த்து வாக்களியுங்கள்

மாண்புமிகு குடியரசு தலைவர் அவர்களுக்கு,
வணக்கம்.
மத்திய அரசு தமிழகத்தில் புதுக்கோட்டை ஆலங்குடி, நெடுவயல் உள்ளிட்ட 31 பகுதிகளில் ஹட்ரோ கார்பன் எடுக்கும் நாசகார திட்ட அறிவிப்பை பொதுமக்களிடம் எவ்வித கருத்து கேட்போ, விளக்கமோ அளிக்காமல் வெளியிட்டுள்ளது. காவிரி பாசன பகுதிகளில் ஹட்ரோ கார்பன் போனற திட்டங்களை நிறைவேற்றுவதை உடனே கைவிடவேண்டும் என்ற விவசாயிகளின் நியாயமான போராட்டத்தை ஆதரவு தெரிவிக்கும் வகையில் இயற்கை விவசாய மீட்பு குழு தங்களின் மேலான் ஆதரவை கோருகிறது.
ஏற்கனவே பருவ மழை பொய்த்ததாலும், கர்நாடக அரசு காவிரியில் உரிய உச்சநீதிமன்ற பங்கீட்டு தீர்ப்பின்படி தரவேண்டிய நீரை தராததாலும் ஏற்ப்ப்ட்டுள்ள கடும் வரட்சியால் விவசாயிகள் தற்கொலை செய்யும் அவல நிலை ஏற்பட்டு இருக்கிறது.
இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் மண் வளம் குறைந்து, இயற்கை வளம் அழிந்து, விவசாயம் கடுமையாக பாதிக்கப்படும். கடும் குடிநீர் பஞ்சத்தோடு மண் மலட்டுதன்மை அடைந்து டெல்டா மாவட்டங்கள் முற்றிலும் அழியும்.
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மீத்தேன், கெய்ல் குழாய் பதிப்பு திட்டங்க்ளை போன்ற திட்டங்களைப்போலவே இத்திட்டமும் மக்களுக்கும், மண்ணுக்கும் எதிரானது. எனவே விவசாயத்தை பாதுகாக்க இத்திட்டத்தை கைவிட ஆவண செய்யும்படியும் கோருகின்றோம்.
Comment